குருநாகல், கலேவெல - கொஸ்பொத்த பகுதியில் நீராடச் சென்ற குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

15,12 வயது சிறுமிகள் மற்றும் 7 வயது சிறுவன் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் குழந்தைகளை காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த கால்வாயில் நீராடச் சென்ற போது குழந்தைகள் நீரில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்