தனிமைப்படுத்தலை நிறைவு செய்தோர் வீடுகளுக்கு


பலாலி வான்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 100 பேர் இன்றைய தினம் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கை வான்படை ஊடகப்பிரவு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொத்தணியில் நேற்றைய தினம் 130 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 10 பேருக்கும், அவர்களுடன் தொடர்பினை பேணிய 120 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,721 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், கட்டார் மற்றும் குவைட் முதலான நாடுகளில் இருந்து நாடுதிரும்பி, தனிமைப்படுத்தப்பட்டிருந்த தலா ஒவ்வொருவருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானமையும் குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK