நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த தொற்றாளர்களில் 496 பேர் பேலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்
பட்டுள்ளது.

ஏனையவர்களில், தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 48 பேருக்கும், காலி மீன்பிடித் துறைமுகத்தில் ஐந்து பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 20 பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்துடன் தொடர்புடைய 40 பேருக்கும் இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்து 896ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 644 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் மூவாயிரத்து 238 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.