1987ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் பெளத்த தேரர்கள் மீது நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கையை இரண்டு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

33 பௌத்த பிக்குகள் மற்றும் நான்கு பொதுமக்கள் 1987 ஜூன் இரண்டாம் திகதி அம்பாறையில் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது அரந்தலாவ படுகொலை (Aranthalawa Massacre)  என அழைக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து மீண்டிருந்த அன்டல்பத புத்தசர தேரரால் கடந்த 2020 ஜூனில் அடிப்படை உரிமைகள் மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபரால் உத்தரவிடப்பட்டுள்ளது.