இலங்கைக்குள் கொரோனா தொற்றாளர்கள், அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் போல சமூகத்தில் ஆங்காங்கே கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் தொற்றிய மூலத்தை கண்டறிய முடியாதபடி சமூகத்தில் அடையாளம் காணப்படுவது அந்த நோயின் 5வது கட்டம் எனவும், இலங்கை இன்னும் அந்த நிலைமைக்கு செல்லவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் சரியான முறையில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றினால், வைரஸ் பரவலை குறைக்க முடியும். அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் கண்டறியப்பட்டிருக்கவில்லை.
சுகாதார துறையினர் உரிய அவதானத்துடன் இருந்த காரணத்தினாலேயே மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் முதல் பெண் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சுகாதார துறையினர் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment