மீண்டும் 5,000 ரூபாய்! மேலும் பல உதவிப்பொருட்கள் - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Wednesday, October 28, 2020

மீண்டும் 5,000 ரூபாய்! மேலும் பல உதவிப்பொருட்கள் - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி


வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்குப் பொருட்களைப் பொதி மூலமாக விநியோகிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதோடு கடன் தவணைகளுக்குச் சலுகை காலம் வழங்குவது தொடர்பாகவும் ஒரு வார காலம் முழுமையாக மூடப்பட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுத் தலைவர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொவிட்- 19 வைரஸ் மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், அத்தியாவசிய சேவைகளை கடந்த காலங்களைப் போலவே திறமையாகவும், சரியான முறையில், தொடர்ச்சியாக பராமரிக்க வேண்டும் என பஷில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது சூழ்நிலையில் மின்சாரம், நீர் விநியோகம், எரிபொருள், எரிவாயு, போக்குவரத்து, சுகாதாரம், அதி வேக வீதியில் வசிக்கும் மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய சேவைகளை சரியான முறையில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முதியவர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், பொதுமக்களின் உதவி தொகை மற்றும் ஓய்வூதியங்களை அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க அரசாங்க முகவர்கள் மற்றும் தபால் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment