அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அரசியல் அதிகாரபீடம் நேற்று முன்தினம் (26) கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தவிசாளர் அமீர் அலி, பொருளாளர் ஹுசைன் பைலா மற்றும் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் ஜவாத் ஆகியோர், இந்த ஒழுக்காற்று விசாரணைக் குழுவில் இடம்பெறுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கமைய, அண்மையில் திரு.ஏ.எம்.எம்.நௌஷாட் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமையை, கட்சியின் அதிகாரபீடம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.