ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் நாளையதினம்(12) தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக தீர்மாநித்துள்ளமையை அடுத்து கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை(12) எட்டப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சிக்கான புதிய தலைமைத்துவத்தை நியமித்ததன் பின்னரே, தேசிய பட்டியல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.