தேசிய பட்டியல் : இன்று தீர்க்கப்படும் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Tuesday, August 11, 2020

தேசிய பட்டியல் : இன்று தீர்க்கப்படும்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, இறுதி முடிவு தொடர்பாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் உறுப்பினர் பதவிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் தலைவர் மனோ கணேசன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

அதேபோல், தமது கட்சியின் உறுப்பினர்களுக்கும் தேசிய பட்டியலில் இடம் கிடைக்க வேண்டும் என ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment