அமைச்சரவை நாளை பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. அதனால், அமைச்சுக்களை வழங்குவதில் நெருக்கடிகள் எதிர்நோக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.
தற்போதுள்ள நிலவரப்படி சிறுபான்மையினரில் இருவருக்கு மட்டும்தான் ‘கபினட்’ அந்தஸ்த்துள்ள அமைச்சு வழங்கப்படவுள்ளதாகத் தெரிகின்றது.
முஸ்லிம்களில் அலி சப்ரிக்கு மட்டுமே”கபினட்” அமைச்சு.
தமிழர்களில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமே “கபினட் ” அமைச்சு.
அதாவுல்லா. விமலவீர திசாநாயக்க, பிள்ளையான், ஜீவன் தொண்டமான், ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சு வழங்கப்படும். பிள்ளையான் சிறையில் இருப்பதால் நாளை பதவியேற்பாரா என்பது உறுதியாக இல்லை.
இராஜாங்க அமைச்சு பெயர் பட்டியலில் அங்கயன் இராமநாதனின் பெயர் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. எனினும், அவருக்கு வழங்குமாறு முன்னாள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை வைத்திருப்பதாக ஒரு தகவல்.
வியாழேந்திரன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோருக்கு எதுவித அமைச்சும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது