தந்தையும் மகனும் என 6 பேர் இம் முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Friday, August 7, 2020

தந்தையும் மகனும் என 6 பேர் இம் முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு

(இராஜதுரை ஹஷான்)

புதிய பாராளுமன்றத்துக்கு;  இம்முறை   மூன்று  தந்தைமார்களும், அவர்களின் மகன்மார்கள் மூவரும் தெரிவு  செய்யப்பட்டுள்ளார்கள்.  பிரதமர்  மஹிந்த  ராஜபக்ஷ மற்றும் அவரது மகன்  நாமல் ராஜபக்ஷ  ஆகியோர்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.   நாமல்  ராஜபக்ஷவும்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும விருப்பு  வாக்கு பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்கள்.

அத்துடன் முன்னாள் அமைச்சர்  சமல் ராஜபக்ஷ  மற்றும் அவரது மகன்  சஷிந்ர ராஜபக்ஷ ஆகியோரும்,  முன்னாள் அமைச்சர்   ஜனக பண்டார  தென்னகோனும் அவரது மகன்   பிரமித தென்னகோனும்  முறையே விருப்பு வாக்குப்பட்டியில் இடம்பிடித்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.   இவர்கள் அனைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மொட்டு சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டார்கள்.

கடந்த 8 வது பாரர்ளுமன்றத்தில் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சதுரசேனாரத்ன ஆகிய இருவரும்  பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால் இம்முறை  சதுர சேனாரத்ன பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை

No comments:

Post a Comment