33 வருடங்களின் பின்னர் இரு ஆசனங்களை கைப்பற்றிய புத்தளம் மாவட்டம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Friday, August 7, 2020

33 வருடங்களின் பின்னர் இரு ஆசனங்களை கைப்பற்றிய புத்தளம் மாவட்டம்

நடந்து முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் தேர்தல் தொகுதியிலிருந்து இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புத்தளம் தொகுதியிலிருந்து சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையும் தெரிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட சிந்தக்க அமல் மாயாதுன்ன 46,058 விருப்பு வாக்குகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் தேசிய கூட்டணி தராசு சின்னத்தில் போட்டியிட்ட அலிசப்ரி ரஹீம் 33, 509 விருப்பு வாக்குகளையும் பெற்று 33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் தொகுதியிலிருந்து இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் நிதி அமைச்சரான பரீஷ்டர் நெய்னா மரிக்கார், புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இறுதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment