கிண்ணியா நகர சபை NFGG உறுப்பினர் அப்துல்லா மஃறூப் உடன் இணைவு - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Saturday, July 4, 2020

கிண்ணியா நகர சபை NFGG உறுப்பினர் அப்துல்லா மஃறூப் உடன் இணைவு

ஹஸ்பர் ஏ ஹலீம்

நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின்(NFGG) கிண்ணியா நகர சபை உறுப்பினராக செயற்பட்டு வந்த உமர் றழி ரனீஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அப்துல்லா மஃறூப் அவர்களுடன்  (04)உத்தியோகபூர்வமாக தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக  களமிறங்கியிருக்கும் முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் பயணத்தில் இணைந்து கொண்ட உமர் அலி  ரனீஸ்  அவர்கள் பொதுத் தேர்தலின் போது அவரின் கரங்களை பலப்படுத்தவுள்ளார்.

குறித்த நிகழ்வு பெரியாற்று முனை பகுதியில் இடம் பெற்றது இதில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்,கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான ஐயூப் நளீம் சப்ரீன் எம்.எம்.மஹ்தி, நிஸார்தீன் முஹம்மட், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸ்மி உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.

No comments:

Post a Comment