கோள் மண்டல காட்சி கூடம் மீளவும் திறப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோள் மண்டல காட்சி கூடத்தினை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் பணிப்பாளர் கே. அருணு பிரபா பெரேராவினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி முதல் சுகாதார பிரிவு மற்றும் அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கோள் மண்டல காட்சிகள் சமூக இடைவெளி சட்டத்திற்கேற்ப வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK