அனுராதபுர சிறுபான்மை மக்களின், அரசியல் மூச்சு இஷாக் ரஹ்மான். - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, July 12, 2020

அனுராதபுர சிறுபான்மை மக்களின், அரசியல் மூச்சு இஷாக் ரஹ்மான்.

அனுராதபுர மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையினரின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ கனவை நிறைவேற்றி. அந்த மாவட்டத்துக்கு பல சேவைகளை பெற்றுத்தந்தவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்  அவர்களே! .

அனுராதாபுர மாவட்டத்தில் அதிகமான கிராமங்களில் அத்தியாவசிய தேவைகளை. நேரம் காலம் பாராது துரித கதியில் செய்து கொடுத்து அந்த பிரதேச மக்களின் மனங்களில் தன்னை ஒரு சேவகனாக தடம் பதித்த அரசியல்வாதி என்றால் அது இஷாக் ரஹ்மான் என்பது பெருமைக்குரிய விடயம்.

“அனுராதபுர மாவட்டத்தின் அரசியல் வரலாற்றிலே எந்தவொரு கட்சியோ அல்லது கட்சித் தலைவனோ சிந்திக்காத ஒரு விடயத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் சிந்தித்து    இஷாக் ரஹ்மான் என்பவரை   , நன்கு திட்டமிட்டு அரசியல் காய்களை தூரநோக்குடன் நகர்த்தியமையினாலேயே, இந்த மாவட்டத்தின் சிறுபான்மை மக்களுக்கென நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கக்கூடிய ஒரு பிரதிநிதித்துவத்தை, இறைவனின் உதவியுடனும், இந்த மாவட்ட மக்களின்  ஒத்துழைப்புடனும் உதவியுடனும்  அவர் உருவாக்கித் தந்தார்.

இலங்கை சுதந்திரம் அடைந்திருந்த போதும், அனுராதபுர மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் வாழும் கிராமங்களில், அந்த சுதந்திரம் கிடைக்காத நிலையே இருந்தது. அந்த சுதந்திரத்தின் பலனை அனுபவிக்க முடியாது பொருளாதார அபிவிருத்தியிலும், வாழ்க்கைத் தேவையிலும் நமது சமூகம் பின்னடைவு அடைந்திருந்ததை, இஷாக் ரஹ்மான் கண்டுகொண்டதனாலேயே இந்த முயற்சியில் துணிந்து இறங்கினார்.

கடந்த பொதுத்தேர்தலில் களமிறங்கிய அவருக்கு. கட்சி, நிறங்கள், சின்னங்கள் என்ற பேதங்களை மறந்து, நமது சமூகத்தவர்கள் ஆதரவளித்தது மாத்திரமின்றி, பெரும்பான்மைச் சமூகத்தினரும் அவரின் வெற்றிக்கு உழைத்தனர்.

அன்று பெரியவர்களின் வழிகாட்டலிலும், மக்களின் ஒத்துழைப்பிலும், இன வேறுபாடுகளுக்கு அப்பால், எங்கள் பிரதேசங்களில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களினாலும் பெரும்பான்மை மக்களின் உள்ளத்தையும் அவரால் வெற்றிகொள்ள முடிந்தது.
.
ஏழைகளின் விடயத்தில் மிகவும் அக்கறையோடு வாரி வழங்கும் பரந்த மனதை, அவரின் சிறந்த செயற்பாடுகளைக் கண்டு வியந்திருக்கின்றேன். அன்று எமது பிரதேசத்துக்கு ஏதாவது பங்சன் வந்தால்தான், அல்லது தேர்தல் வந்தால்தான் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கான முடியும் அதுவும் கிராமங்களில் பார்க்க முடியாது ஆனால் இஷாக் ரஹ்மான் தொடந்து மக்களை சந்தித்து நிலமைகளை கேட்டறிந்து செல்வார். பல வசதிகள் இல்லாத எங்கள் பிரதேசத்தில் அவர் தனி மனிதாக நின்றுகொண்டு, ஏராளமான சேவைகளை செய்துள்ளார். மக்களின் நலனுக்காக அவரின் சொந்த நிதியியல் செய்த சேவை இன்றும் எங்கள் கண்முன்னே வந்து போகின்றன. அந்த நன்றிக் கடனை என்றும் எமது மாவட்ட மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

ஒருமுறை வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் – இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் பணியாற்றினார். பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வந்தார். (இன்ஷா அல்லாஹ்) இம்முறையும்  அவர் மக்களின் அமோக ஆதரவை பெற்று அதிகூடிய வாக்குகளால் பாராளுமன்றம் செல்வார், மீண்டும் வெற்றி பெற்று அவரின் எதிர்கால பாரிய வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல, அநுராதபுர அனைத்து மக்களும். மக்கள் சேவகன்  இஷாக் ரஹ்மானுக்கு உங்கள் வாக்குகளை அழித்து உதவுமாறு மிகவும் சமூக அக்கறையுடன் வேண்டிக்கொள்கின்றோம் 

No comments:

Post a Comment