சமூக வலைத்தளம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை! - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Sunday, July 12, 2020

சமூக வலைத்தளம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

சமூக வலைத்தளம் ஊடாக பல்வேறு போலித் தகவல்களை பரப்பும் நபர்கள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

அவ்வாறான நபர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் தொடர்பில் போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு மையம் மற்றும் அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடும் தகவல்களை மாத்திரம் நம்புமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நேற்றைய தினம் அரச ஊழியர்களுக்கு தொடர் விடுமுறை என பரவிய போலி தகவல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment