கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு, மக்கள் காங்கிரஸ் ஆதரவளிக்க முடிவு - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Wednesday, July 8, 2020

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு, மக்கள் காங்கிரஸ் ஆதரவளிக்க முடிவு

கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடாததன் காரணமாகவே, இம்முறை பொதுத் தேர்தலில், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க, மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்டக் கிளை தீர்மானித்துள்ளதாக, மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் ஹாஜியார் தெரிவித்தார். 

அதனடிப்படையில், மக்கள் காங்கிரஸ் தலைவரின் ஆலோசனையின் பேரில், கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் ஹலீம் மற்றும் பொருத்தமான பெரும்பான்மையின வேட்பாளர் ஒருவருக்கு கட்சியானது ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது எனவும் கூறினார். 

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் இன்னுமொரு பெரும்பான்மையின சகோதரருக்கு, மக்கள் காங்கிரஸ் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது. பெரும்பான்மையின வேட்பாளரின் பெயர் தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள், அபிமானிகள் மற்றும் நலன்விரும்பிகளுக்கு விரைவில் தெரியப்படுத்துவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment