சமூகத்தை அடமானம் வைத்து நானோ எனது குடும்பமோ வாழ வேண்டுமென ஒருபோதும் எண்ணியதில்லை;: பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா!

ஒரு சமூகத்தை அடமானம் வைத்துக் கொண்டு அந்த சமூகத்தை பாதாளத்தினுள் தள்ளிவிட்டு நானும் எனது குடும்பமும் வாழ வேண்டும்  என நான் ஒருபோதும் எண்ணியதில்லை. அவ்வாறு பிழைப்பு நடத்துகின்ற துரோகிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டிய நேரமே இதுவாகும் என முன்னால் மாகாண சபை உறுப்பினறும்  பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.
பிராந்திய மக்களுடனான விசேட சந்திப்பு நேற்று (07) நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்;ந்து உரையாற்றுகையில்,
நான் ஒரு பாடசாலை இல்லாத கிராமத்தில் பிறந்தவன். ஆனால் தற்போது இந்த  கிராமத்திற்கென தரமான பாடசாலையை உருவாக்கியுள்ளேன். புத்தளத்தில் கல்வி வலயம் தமிழ் பிரிவு, விஞ்ஞானப் பாடசாலை, செய்னப் ஆரம்பப் பாடசாலை, ஸாஹிரா ஆரம்ப பாடசாலை, 300க்கும் அதிகமான தொண்டர் ஆசிரியர் நியமனங்கள் என்பவற்றை பல போராட்டங்களுக்கு மத்தியில் பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆனால் நான் பெற்ற பிள்ளைகளுக்கு பலர் பெயர் போட்டுக் கொண்டு வந்திருக்கின்றனர்.   யார் சதி செய்தாலும், துரோகமிழைத்தாலும் எத்தனை சவால்கள் வந்தாலும், காலிழுப்புகள் செய்தாலும், அதிகப்படியான விருப்பு வாக்குகளுடன் புத்தளம் மாவட்டத்திற்கான சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பெற்று எமது பலத்தை நிரூபிப்போம். நேர்மையாக இந்த சமூகத்திற்காகவும், கட்சித் தலைமையோடு விசுவாசத்துடனும் இரு சமூகங்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்போம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
 இன்று என்னுடைய வெற்றிக்காக 12 பிரதேச சபை உறுப்பினர்கள்  பிரசாரம் மேற்கொள்கின்றனர், பல உலமாக்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த புத்தளம் மாவட்டதிலே வரலாறு காணாத அபிவிருத்தியை என்னால் செய்ய முடியும் என நம்புகிறேன். அதற்கான திட்டங்களும், தலைமையின் வழிகாட்டலும் என்னிடம் உள்ளது. சமூகத்திற்காக குரல் கொடுத்து வரும் எமது கட்சித் தலைமையை வீழ்த்த இன்று அவரது சகோதரரை அநியாயமாகக் கைது செய்து வைத்துள்ளனர். கொரோனா என்னும் போர்வையில்  உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுற்றுநிரூபத்தை மீறி முஸ்லிம் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கருத்துக்களைக் கூட செவி மடுக்காமல் அரச தலைவர்கள்,  எமது சகோதரர்களின் ஜனாஸாக்களை எரியூட்டி பெரும்பான்மையினவாதிகளை திருப்திபடுத்தினர்.
கொரோனாவினால்  பாதிக்கப்பட்டு வருமானமிழந்த மக்களுக்கு 5000 ரூபாவை மக்களின் நிதியிலிருந்தே வழங்கினர். இந்த 5000 ரூபாவை தாங்கள் தான் பெற்றுக் கொடுத்ததாக கூறிக் கொண்டு இனவாதிகளை திருப்பதிப்படுத்திய அரச தலைவர்களை , கட்சித் தலைவர்களாக கொண்டவர்கள் தாங்கள் ஆளும் கட்சி என கூறிக் கொண்டு அநாகரிகமாக மக்களிடம் வாக்குகளை பெற முற்படுகின்ற செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் நிச்சயம்  தகுந்த பாடம் கற்பிப்போம் என அவர் தெரிவித்தார்.
 இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், பிராந்திய முக்கியஸ்தர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK