உனவட்டுன ரயில் நிலையம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காலி, ஹபராதுவ பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் உனவட்டுன ரயில் நிலைய அதிபர் தொடர்புகளை பேணியுள்ளார்.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவரை 14 நாட்கள் சுயதனிமைப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை உனவட்டுன உப ரயில் நிலையம் கிருமி நீக்கம் செய்யபப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.