தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, July 12, 2020

தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

(FLASH NEWS | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(13) முதல் ஆரம்பமாகின்றது.
இதன்படி, இன்றைய தினம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கு வாக்களிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
இதற்கமைய இன்று, நாளை மற்றும் 15, 16, 17 ஆம் திகதிகளிலும் அதேபோன்று 20 மற்றும் 21 ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்பு நடாத்தப்படவுள்ளது.
பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமென குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், பொலிஸார், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

இதேவேளை, இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment