கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, July 12, 2020

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை மோசமடைந்தால் மீண்டும் அனைத்து பாடசாலை மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கி சுகாதார பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய கல்விசார் ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அதிகாரிகள் இணைத்து கல்வி அமைச்சில் தகவல் நிலையமொன்றும் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதி கல்விப் பணிப்பாளரின் தலைமையின் கீழ், இந்த நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், 1988 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பாடசாலை அதிபர்கள், கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்விச் சேவை அதிகாரிகள் தாம் சேவையாற்றும் பிரதேசங்கள் தொடர்பில் தகவல்களை வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment