நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் ஏற்பட்டமைக்கு அரசாங்கமே காரணம்! மருத்துவ சம்மேளனம் எச்சரிக்கை - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, July 12, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் ஏற்பட்டமைக்கு அரசாங்கமே காரணம்! மருத்துவ சம்மேளனம் எச்சரிக்கை

நாட்டில் இன்று கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் ஏற்பட்டமைக்கு அரசாங்கமே காரணம் என்று இலங்கை மருத்துவ சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு திட்டங்களில் தளர்வுகளை ஏற்படுத்தியமை, பொது ஒன்றுக்கூடல்களுக்கு அனுமதித்தமை, பொது போக்குவரத்துக்கு அனுமதியளித்தமை என்பன இதற்கான காரணங்கள் என்று இலங்கை மருத்துவ சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதுமான அளவில் பயன்படுத்தப்படுவதில்லை.அத்துடன் அரசாங்கத்தால் அது கண்காணிக்கப்படவில்லை.

இந்நிலையில் நாட்டை ஒரு புதிய சாதாரண நிலைமைக்கு மாற்றியமைப்பதற்கான ஒரு பாரிய பிரசாரத்தால் அடைப்பட்டதை பார்ப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

மிகவும் துரதிஷ்டவசமாக, எடுக்கப்பட்ட சில பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளால் இந்த சிக்கல் தோன்றியுள்ளது.

No comments:

Post a Comment