கொரோனா தொற்றுடைய நபர் வந்துசென்றதை அடுத்து களுத்துறை மாவட்டம் ஹொரண நகரிலுள்ள விடுதியொன்று தற்காலிகமாக இன்று மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய் தனது குடும்ப அங்கத்தவர்களுடன் ஹொரண நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு கடந்த 14ஆம் திகதி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த விடுதியிலிருந்த இருவர் சுய தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு பி.சி.ஆர் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவுள்ளனர்.