இலங்கையில் கொரோனா நோயாளர்கள் அதிகரிப்பு! தனியார், அரச துறையினருக்கு அறிவுறுத்தல் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Wednesday, July 15, 2020

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் அதிகரிப்பு! தனியார், அரச துறையினருக்கு அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது சமூக தொற்றாக மாறுவதை தடுக்க அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி அரச மற்றும் தனியார் துறையினர் சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஊழியர்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வது பொது மற்றும் தனியார் துறை நிறுவன தலைவர்களின் பொறுப்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் பணிக்குழுவுடன் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment