கல்கிரியாகம ரணவ பிரதேசத்தில் மற்றுமொறு கொரோனா தொற்றாளர்  அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் பகுதியில் வைத்தே குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்புகளை பேணிவந்த கல்கிரியாகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அரச சேவையாளர்கள் 100 பேரை தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சுகாதார சேவை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த நபர் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலிற்கு அமைய அங்குள்ள பலரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்டபடுத்தப்பட்டுள்ளனர்.