யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இன்றைய தினம் அதிகாரிகள் உள்ளிட்ட எவரையும் வளாகத்திற்கு வருகைதர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 3 ஆம் ஆண்டு மாணவி ஒருவரின் சகோதரரான பாதுகாப்பு தரப்பை சேர்ந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த மாணவிக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது