இராஜாங்கனை பகுதியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் உள்ளட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ள நிலையில், இதுவரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,646 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1,981 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.