தெற்கில் படம் காட்டி இன துவேசத்தை கிளப்பி வாக்குகளை சேகரிக்க முற்படுகிறார்கள்_முன்னால் எம்.பி அப்துல்லா மஃறூப் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Monday, July 13, 2020

தெற்கில் படம் காட்டி இன துவேசத்தை கிளப்பி வாக்குகளை சேகரிக்க முற்படுகிறார்கள்_முன்னால் எம்.பி அப்துல்லா மஃறூப்

ஹஸ்பர் ஏ ஹலீம்

தெற்கில் படம் காட்டி இன துவேசத்தை கிளப்பி வாக்குகளை சேகரிக்க முற்படுகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று (12)இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சி எட்டுக்கும் குறையாத ஆசனங்களை பெறுகின்ற போது கவனத்தை ஈர்க்கும் ஆகஸ்ட் ஆறாம் திகதிக்கு பின் எந்தவித குற்றமும் அற்றவர் றிசாத் என்பதை அவர்களே சொல்வார்கள் பலமிக்க மக்கள் ஆணையை இதற்காக வழங்குங்கள் ஆயிரம் வருடங்கள் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த இந்த நாட்டில் எம்மை கொச்சைப்படுத்த நினைக்கிறார்கள். குமார் சங்கக் கார, மஹேல போன்றவர்களை விசாரனைக்கு உட்படுத்தி விட்டு வழியே வாபஸ் பெற்றார்கள் இதற்கான முடிவுகளை நாமும் தலைவர் றிசாதின் கைகளை பலப்படுத்துவதன் ஊடாக காண முடியும். சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதி தேர்தலின் போது 63 வீதமான வாக்குகளை பெற்று 225 உறுப்பினர்களில் 101 ஆசனங்களையே நாடாளுமன்ற தேர்தலின் போது பெற்றார் கோத்தபாய 52 வீதமான வாக்குகளை பெற்றார் நாடாளுமன்றில் 80 தொடக்கம் 90வரையான ஆசனங்களையே பெற முடியும் பெரும்பான்மை ஆசனம் பெற முடியாது என்றார்

No comments:

Post a Comment