கொவிட் 19 தற்போதைய நிலைமை தொடர்பில் உண்மைக்குப் புறம்பான மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சிறு விளம்பரங்களில் ஏமாறாமல் இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் புரிந்துணர்வுடன் செயல்படுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக அறிக்கை
கந்தகாடு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தை கேந்திரமாகக்கொண்டு நாட்டிற்குள் கொவி;ட் 19 நோயாளர்கள் பதிவாவது ஆரம்பமானதைத் தொடர்ந்து இந்த வைரசு தொற்று நாட்டிற்குள் பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆகக்கூடிய வகையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தினால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நோயாளர்களை அடையாளங்காணுதல், அவர்களுடன் தொடர்புபட்டவர்களை அடையாளங்காணுதல் மற்றும் அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்டுபடுத்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பிரதேசம் மற்றும் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மிகவும் துரிதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இந்த வகையில், சம்பந்தப்பட்ட தரப்பினரை அடையாளங்கண்டு பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களில் இவர்கள் முழுமையாக கொவிட் 19 தொற்று நோயாளர்களாக அடையாளங்காணப்படாமல் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிலைமையின் காரணமாக பல்வேறு நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறான உண்மைக்குப் புறம்பான தகவல்கள் சமூகத்திற்குள் முன்னெடுக்கப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது.
இதேபோன்று இந்த நிலைமைக்கு மத்தியில் அரசாங்கத்தினால் விடுமுறை தினத்தை அறிவிப்பதற்கும் ஊரடங்கு சட்டத்தை விதிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பல்வேறு உண்மைக்குப் புறம்பான தகவல்கள் சில தரப்பினரால் தொடர்ச்சியாக சமூகத்தின் மத்தியில் முன்னெடுக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரையில் இவ்வாறான எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அரசாங்கத்தினால் வலியுறுத்தப்படுகின்றது.
இதற்கமைவாக, இவ்வாறான உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூகமயப்படுத்துவதன் நோக்கமாவது பொதுமக்களை தவறாக வழிநடத்தி சமூகத்தில் தேவையற்ற குழப்ப நிலையை ஏற்படுத்துவதே ஆகும் என்பது தெளிவாகின்றது. இந்த வகையில் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை சமூகமயப்படுத்துவோர் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படுவதுடன், அரசாங்கம் இதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கியுள்ளது.
இதில், எந்தவொரு நபரும் கொவிட் 19 தொற்று நோயாளியாக பதிவானால் அது தொடர்பாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மற்றும் சமூகத்திற்கு தெளிவுபடுத்தல் தொடர்பான அனைத்து விடயங்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்களை உடனடியாக பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ளுகின்றது.
இதனால் உண்மைக்குப் புறம்பான மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சிறு விளம்பரங்களில் ஏமாறாமல் இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் புரிந்துணர்வுடன் செயல்படுவதைப் போன்று விசேடமாக சுகாதார பிரிவினரினால் தெளிவுபடுத்தப்பட்டுள்ள அனைத்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாக கடைப்பிடித்து பாதுகாப்பு மற்றும் சுயமாக செயல்படுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
நாலக கலுவௌ
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்.