சாய்ந்தமருது சமூர்த்தி வங்கியில் கடன் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு

 



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


சாய்ந்தமருது சமூர்த்தி வங்கியினால் தொழிலை மேம்படுத்துவதற்கான அதிகப்படியான கடன் வழங்கும் திட்டம் நேற்று (17) வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இதன்போது லக்ஜே திட்டத்தின் மூலம் சுமார் 10 இலட்சம் ரூபாய் பணத்தை தொழிலை மேம்படுத்தி, அத்தொழிலை சிறப்பாகக் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்டது.



அந்தவகையில், சாய்ந்தமருதைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளி மீரா முகைதீன் பஸீல் என்பவர் தனது தச்சுத்தொழிலை மேம்படுத்துவதற்காக இவ்வாண்டின் முதலாவது அதிகப்படியான கடன் திட்டத்தைப் பெற்றார்.


சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், 

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் மற்றும் சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ். ஹிதாயா, சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் எ.எம்.எம். றியாத், வலய உதவி முகாமையாளர் நௌஷாத், சமூர்த்தி வங்கி காசாளர் எம்.பீ.எம். அன்லைஸ் உட்பட பலரும் கலந்து கொண்டு இக்கடனை வழங்கி வைத்தனர்.



சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த மீளாய்வுக் கூட்டமும் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்