13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த , குறித்த சிறுமியின் சித்தப்பா என்ற 45 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிராந்துருக்கோட்டே பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி தனது தாயின் அறிவுறுத்தலுக்கமைய சந்தேக நபரின் வீட்டிற்கு சோளம் கொடுக்கச் சென்றபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு பாடசாலையில் , அவளின் நடத்தையில் மாற்றத்தை கண்ட ஆசிரியர்கள் குறித்த சிறுமியிடம் விசாரித்தபோது இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபர் புதன்கிழமை (02) அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராந்துருக்கோட்டே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK