சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு

 



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.



இந் நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சாய்ந்தமருதில் உள்ள 17 பிரிவுகளின் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கி வைத்தார்.



சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் மற்றும் சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ். ஹிதாயா உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் சங்கத் தலைவர்கள் உட்பட சங்க உறுப்பினர்கள் 17 பேருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.



சமூர்த்தி வங்கிக்குப் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் இவ்வாண்டின் (2025) முதலாவதாக அம்பாறை மாவட்டத்திலேயே அதிலும் சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் உறுப்பினர்களுக்கே வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிட்டத்தக்கது.

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்