ரிஷாட் பதியுதீன் - ஜூலி சங் சந்திப்பு

 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங்கை வியாழக்கிழமை (26) அன்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,


"இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன், எமது நீண்டகால தொடர்புகள் மற்றும் நிலைபேறான தன்மை குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.


இதன்போது, புனித ரமலான் மாதத்தில், காசா மக்கள் எதிர் கொண்டுள்ள பெரும் துயரங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பிலும் எமது ஆழ்ந்த கவலையை தூதுவரிடம் வெளிப்படுத்தினோம். " எனவும், மனிதாபிமான விடயங்களை முன்னிறுத்தியும் உலக அமைதிக்காகவும் அமெரிக்கா தனது ஆதரவினை வழங்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்