மின்சாரம் தாக்கி சிறுமி பலி


மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை 6 வயது சிறுமி ஒருவர் கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். அவர் தவறுதலாக கீழே வீழ்ந்தபோது நீர் இறைக்கும் இயந்திரத்துக்குச் சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வீட்டார் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வந்த போதும் சிறுமி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் புளியங்குளம், பழையவாடி பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய ந.மதுசாளினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்