காலாவதியான 15 ஆயிரம் தொன் அரிசி சிக்கியது


சுமார் 15 ஆயிரம் தொன், காலாவதியான அரிசி மூட்டைகள், வர்த்தக நிலையத்திற்கு இறக்கப்பட்டு கொண்டிருந்த போது கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம், மாவனெல்ல நகரில், வர்த்தக நிலையமொன்றில் இன்று இடம்பெற்றுள்ளது.


வர்த்தக நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மூட்டைகளில், காலவதியாகும் திகதியாக 2023 நவம்பர் மாதம் பொறிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த அரிசி மூடைகள் குறிப்பிட்ட வர்த்தக நிலையத்திற்கு முன்பாக லொறியில் இருந்து இறக்கப்பட்டு வர்த்தக நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்டுள்ளது.


அதனையடுத்து அந்த வர்த்தக நிலையத்தின் வர்த்தகர் கைது செய்யப்பட்டார். அவரை, கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகளுடன் மாவனெல்ல நீதவான் முன்னிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்