முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் பலன்களை துண்டிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு தடையாக உள்ளதாக, இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு அவதானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதியளித்தபடி, ஆட்சியில் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் முயற்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அரச தலைவர்களின் சலுகைகள் மற்றும் நன்மைகளை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார்.
எவ்வாறாயினும், முன்னாள் அரச தலைவர்களுக்கான ஓய்வூதியம் போன்ற சில சலுகைகளை அரசியலமைப்பைத் திருத்தம் செய்யாமல் குறைக்கவோ அல்லது அகற்றவோ முடியாது என்று குழு கண்டறிந்துள்ளது.
“ஜனாதிபதியின் பதவியை ஏற்றுக்கொண்டவுடன், அத்தகைய பதவியை வைத்திருப்பவர் அத்தகைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கும், அதன் பிறகு, பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கும் தகுதியுடையவராவார். இந்த உறுப்புரையின் எந்தவொரு திருத்தம், ரத்து அல்லது மாற்றுதல் மற்றும் இந்த உறுப்புரைக்கு முரணான எந்தவொரு சட்டமும் அல்லது அதன் விதிகளும் பின்னோக்கி அதற்கு மாறாக செயல்படாது” என அரசியலமைப்பின் பிரிவு 36 (2) கூறுகிறது,
பின்னோக்கிச் செயல்படும் வகையில் ஒரு சட்டத்தை இயற்றுவது அரசாங்கத்திற்கு இலகுவானது அல்ல என்பது இதன் அர்த்தமாகும்.
தவிர, ஜனாதிபதி உரிமைச் சட்டத்தின்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு வாடகை இல்லாமல் பொருத்தமான வீடுகள் வழங்கப்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய வீட்டின் வாடகை பெறுமதி அரசாங்க மதிப்பீட்டின்படி 4.6 மில்லியன் ரூபா என அண்மையில் ஜனாதிபதி அநுர குறிப்பிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்கள் திரு ராஜபக்ஷவை வீட்டைக் காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
திரு. ராஜபக்ச, அவர் மீது நடவடிக்கை எடுக்க எழுத்துப்பூர்வமாக கோரிக்கை முன்வைக்குமாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து கேட்ட போது, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அரசியலமைப்பின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் போன்ற சில நன்மைகளை உடனடியாக கத்தரித்து விட முடியாது எனவும், இதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை குறைப்பதற்கு அத்தகைய தடை இல்லை என்று அவர் கூறினார்.
"30,000 சதுர அடிக்கு மேல் உள்ள தற்போதைய குடியிருப்புக்கு பதிலாக திரு. ராஜபக்சவுக்கு பொருத்தமான வீடுகளை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்," என்று அவர் கூறினார்
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK