மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி



இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (30) காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போத்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.



அத்தோடு மத தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இன்று பிற்பகல்  அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது.

1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் புதன்கிழமை (29) இரவு  உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது



News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்