சாதாரண தரத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 600 ரூபாவாகவும், முட்டை ஒன்றின் மொத்த விற்பனை விலை 28 மற்றும் 29 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
ஆனால் சில பிரதேசங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 900 முதல் 1100 ரூபா வரை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சில பகுதிகளில் ஒரு முட்டை 40 ரூபாய்க்கும், சிறிய முட்டை 32 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
700 முதல் 800 ரூபா வரை மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை நாளாந்தம் கோழி இறைச்சியின் தேவையின் காரணமாக 600 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாளாந்த முட்டை தேவையை விட அதிகளவு முட்டை கையிருப்பு கிடைப்பதால் வெள்ளை முட்டை ஒன்றின் மொத்த விலை 28 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் மொத்த விற்பனை விலை 29 ரூபாவாகவும் குறைந்துள்ளதாக, முட்டை மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK