போதையில் மோசமாக நடந்துகொண்ட வெளிநாட்டவர்கள்

 வாதுவ பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இரவு நேரத்தில் நீச்சல் குளத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, எதிர்ப்பினை வெளிப்படுத்திய பெண் வரவேற்பாளர் ஒருவரை வலுக்கட்டாயமாக நீச்சல் குளத்திற்குள் தள்ளியதாக தகவல்கள் தெரவிக்கின்றன.


அந்த விடுதியில் தங்குவதற்காக வருகைதந்திருந்த போலந்து நாட்டின் குழுவினரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் வரவேற்பாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 


குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் நீச்சல் குளத்தில் நீந்த வேண்டாமென பெண் வரவேற்பாளர் தெரிவித்ததை அடுத்து, எதிர்ப்புத் தெரிவித்த வெளிநாட்டு குழுவினர் அந்தப் பெண்ணை நீச்சல் குளத்திற்குள் தள்ளிவிட்டுள்ளனர். 


விடுதி நிர்வாகம் இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்களிடம் கேட்டறிய முற்பட்ட வேளையில், அவர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்


படுகிறது

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்