பொதுமக்களிடமிருந்து துரிதமாக முறைப்பாடுகளை பெறுவதற்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் அல்லது அந்த திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள் அல்லது முறைப்பாடுகளை 071-4033300 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பலாம்.
இந்த எண்ணிற்கு பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் முறைப்பாடுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்கனவே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, TELL DMT என்ற முகநூல் பக்கம் மூலமும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைவதற்கான மற்றொரு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK