பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறியை நோக்கி துப்பாக்கிச் சூடு

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறியை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் சூரியவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

லுனுகம்வெஹர பிரதேசத்திலிருந்து சூரியவெவ பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த லொறியை சோதனையிட பொலிஸார் வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியும், லொறி அதனை பொருட்படுத்தாமல் கடந்து சென்றுள்ளது.

இதன் காரணமாக லொறியின் டயரை குறிவைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர், லொறி நிறுத்தப்பட்டு, அதன் சாரதி சூரியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும், அந்த லொறியில் 17 மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதான லொறியின் சாரதியை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Fazu

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்