மெக்சிகோ பேருந்து விபத்தில் 19 பேர் உயிரிழப்பு





மெக்சிகோ பேருந்து விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய மெக்சிகோவில் உள்ள சகதகஸ் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து ஏற்பட்டது.

மக்காச்சோளத்தை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்துடன் பேருந்து மோதியதையடுத்து, உழவு இயந்திரத்தில் இருந்து தளர்ந்து அதிலிருந்து தப்பிய டிரெய்லர் பேருந்துடன் மோதியதாக சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து பேருந்து வீதியை விட்டு விலகி பாறையில் விழுந்ததாக கூறப்படுகிறது.

விபத்தின் போது, பேரூந்து அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு அருகில் உள்ள ஜுவாரெஸ் நகருக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் புலம்பெயர்ந்தோர் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Fazu

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்