பதுளை பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த அதிகாரிகளை இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை பேருந்து நிலையத்திற்கு முன்பாக தேர்தல் விதிமுறைகளை மீறியவர்களை பொலிஸார் கைது செய்ததையறிந்த இராஜாங்க அமைச்சர், பொலிஸ் நிலையத்திற்கு வந்து வன்முறையில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படுகிறது.
சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் சட்டங்களை மீறி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் குறித்த குழுவை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் சம்பத் தவறாக நடந்து கொள்கிறார் என்பதை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK