ஊடகப் படுகொலைகள் பற்றி முழுமையான விசாரணைகள் : அநுர உறுதி


பல்வேறு ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை என்பன தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் பரப்புரைகளுக்காக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நீதி நிலைநாட்டப்படும் என்பதில் நான் மிக ஆழமான உறுதியுடன் உள்ளேன்.

இந்தக் குற்றங்கள் நிகழ்ந்து எத்தனை வருடங்கள் கடந்திருந்தாலும் நிச்சயமாக நீதியென்பது நிலைநாட்டப்பட்டே தீரும்.

அனைத்து வழக்குகள் தொடர்பிலும் நான் தீர்க்கமாக விசாரிப்பேன் என தெரிவித்துள்ளார்.


News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்