அரசியல்வாதிகளின் தவறுகளினால் தான் இளைஞர்கள் மாற்றத்தை கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ‘திலித் கிராமத்திற்கு’ தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"இப்போது உங்கள் வீடுகள் தேர்தல் அறிக்கைகளால் நிரம்பியுள்ளன. ஓவ்வொரு 05 வருடங்களுக்கும் இவை வழங்கப்படுகின்றன. ஆனால் நாம் முன்னோக்கி செல்லவே இல்லை.போக வழியே இல்லையா? என்று தான்
இலங்கை இளைஞர்கள் வீதியில் இறங்கினர். மாற்றங்களை கோரினர், அதில் வெளிநாட்டு தாக்கங்கள் இல்லை என்று கூற முடியாது.
ஆனால் இந்த நாட்டில் உள்ள சுயநல அரசியல்வாதிகளால் இவர்கள் கிளர்ந்தெழுந்தனர்.
அதைத்தான் சொல்கிறேன்... மாற்றம் வேண்டும் என்றால் வேறு மாற்று நபர் இருக்க வேண்டும். நீங்கள் வித்தியாசத்தை உணர வேண்டும்." என்றார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK