ஓயாத பிரபஞ்சம்


அன்பால் அமைந்த செல்வங்களே,

இலங்கையின் குழந்தை செல்வங்களை நல்லதோர் பிரஜையாக உருவாக்கும் நோக்கத்தினூடாக இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நாம் பிள்ளையார் சுழியிட்டுத் தொடங்கிவைத்த ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தினை, ஜனாதிபதி தேர்தல் சார் சட்ட ஒழுங்குகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் இந்த சமயத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படக்கோரி தேர்தல்கள் ஆணைக்குழு என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொது நிதியிலிருந்து ஒற்றைச் சதம் கூட இது வரை செலவழித்திராத போதிலும் கூட தேர்தலை முன்னிட்டு இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது நாட்டின் சட்ட ஒழுங்கை மதிக்கும் அரச கொள்கை வகுப்பாளரான எனது தலையாய கடமையாகும். ஆகையினாலே ஜூலை 29 முதல் செப்டம்பர் 22 வரையில் ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டியத் தேவை காணப்படுகின்றது. இதனை வேதனை சுமந்த நெஞ்சத்துடன் நாட்டின் நாற்பத்து மூன்று இலட்சம் எனதருமை குழந்தை செல்வங்களுக்கு அன்புடன் அறியத்தருகின்றேன்.

பிரபஞ்சம் வேலைத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் தொட்டு இன்று வரையில் இலங்கை முழுவதிற்குமான பரம்பல் காணப்படும் வகையில் நாடுமுழுவதிலும் முன்னூற்று எண்பத்து ஐந்து பாடசாலைகளுக்கு (385) நவீன வகுப்பறைகள் கட்டிக்கொடுக்கப் பட்டுள்ளதனையும், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துத் தேவைகளை கருத்திற்கொண்டு எண்பத்து ஒன்பது (89) பாடசாலை பேரூந்துகள் பெற்றுக் கொடுக்கப் பட்டுள்ளமையினையும் பணிவன்புடனும் பெருமையுடனும் இங்கே பதிவு செய்கின்றேன். தாய்நாடு மற்றும் குழந்தைகளை நேசிக்கும் ஒரு தகப்பனாக ஒரு நற் பிரஜையாக இவற்றினை எதிர்காலத்திலும் என் வாழ்நாள் முழுவதிலும் முன்னெடுத்து செல்வேன் என்பதனையும் மார் தட்டி பதிவு செய்கின்றேன்.

எனவே செப்டம்பர் 21 ஆம் திகதி நாட்டின் தலைவராக நான் பொறுப்பேற்றப் பின்னர் இந்த பொன்னான வேலைத்திட்டம் மீள தொடங்கப்படும் என்பதனை உங்களிடம் பேரன்போடு பகிர்ந்து கொள்கின்றேன். அதன் படி, முன்னூற்று எண்பத்து ஆறாவது (386) ‘பிரபஞ்சம்’ நவீன வகுப்பறைகள் கட்டுவிக்கும் திட்டத்தை அம்/மடவலலந்தை மஹா வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைப்பதற்கான அத்தனை முன்னெடுப்புகளும் இன்றளவில் செம்மையாக திட்டமிடப்பட்டுள்ளன.

அந்நாள் முதல், 2025 டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள் இலங்கையிலிருக்கும் 10,096

பாடசாலைகள் மற்றும் 822 பிரிவெனாக்கள் உட்பட 126 தனியார்

பாடசாலைகளையும், நவீன வகுப்பறைகளாக கட்டியெழுப்புவதோடு நிறுத்திவிடாமல் அவற்றினை நவீன பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதனை அரசின் பண்பட்ட கடமையாக கொண்டு எம்மூடாக நடத்திக்காட்டுவோம் என்பதனை அன்பால் உறுதிமொழிகிறேன்.

அதனடிப்படையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான (AI) நவீன தொழிநுட்ப அறிவால் நிறைந்த பிரஜைகளை இலங்கை மண்ணிலிருந்து உலகத்தின் ஏனைய நாடுகளுக்கு வழங்க இந்த இருபத்து இரண்டாம் நூற்றாண்டினை நாம் வடிவமைப்போம்.

அன்பார்ந்த குழந்தைகளே, அதுவரையில் உங்களுக்கும், உங்களது அன்புப் பெற்றோர்களுக்கும், ஆசிரியர் – அதிபர்களுக்கும் தைரியமும் ஆரோக்கியமும் நிறைந்த எதிர்காலம் அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்க இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்கின்றேன்.


நான், பேரன்போடு,

சஜித் பிரேமதாச 06.08.2024

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்