புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் பங்கேற்பு

 


புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் (08) புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இதில் புத்தளம் மாவட்டத்தின் நீர்வாழ் உயிரின வளர்ப்பு, கல்வி முன்னேற்றம், விளையாட்டு அபிவிருத்தி, பாதை அபிவிருத்தி, சுகாதாரம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, நீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் புத்தளம் மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு துறை ரீதியாகவும் தனித்தனியான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும், அதன் ஊடாக மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் துரித கதியில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தனது நோக்கம் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் இதன்போது சுட்டிக் காட்டினார். 

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் காட்டிவரும் கூடுதல் கரிசனை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயாதுன்னே, உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் உள்ளிட்ட பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.








News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்