இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கைப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு.


அயல் நாடுகள் எமக்கு மிகவும் முக்கியம், இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு மிகுந்த நல்லெண்ணம் உள்ளது. 

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் இன்று (2024.06.20) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.

பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றி தொடர்பில் கலாநிதி ஜெய்சங்கருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நெருக்கமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை உறுதி செய்தார். கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அண்மைய நெருக்கடியான காலங்களில் இந்தியா அளித்த ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இலங்கை போன்ற அயல் நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும், இந்தியாவுக்கு இலங்கை மீது மிகுந்த நல்லெண்ணம் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயசங்கர் கூறினார். இந்திய வெளியுறவு அமைச்சர், ``அயலவருக்கு முதலிடம்'' என்ற கொள்கையை இந்திய அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும், தனது நெருங்கிய சமுத்திர அயல் நாடான இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதை வலியுறுத்துவதே தனது பயணத்தின் முக்கிய நோக்கம் என்றும் வலியுறுத்தினார்.

நாட்டில் இந்திய முதலீடுகள், அபிவிருத்தித் திட்டங்கள், இணைப்புத் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு குறித்து பிரதமரும் இந்திய அமைச்சரும் கலந்துரையாடினர்.

இந்திய தூதுக்குழுவில் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வெளியுறவு அமைச்சின் மேலதிக செயலாளர் (இந்து சமுத்திர வலயம்) புனீத் அகர்வால் மற்றும் இணை செயலாளர் சந்தீப் குமார் பியாபு, பிரதி உயர் ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பிரதமரின் ஆலோசகர் சுகீஸ்வர சேனாதீர, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தெற்காசியா) நிலுகா கதுருகமுவ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு


 

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்