நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், (Staff Cricket Tournament 2023) உபவேந்தர் கிண்ணத்துக்காக 10 அணிகளாக பிரிந்து தொடராக இடம்பெற்ற சுற்றுப்போட்டிகளில் விளையாடி இறுதி சுற்றுக்கு பிரயோக விஞ்ஞான பீட “பல்கன்ஸ்” அணியும் தொழில்நுட்பவியல் பீட அணியும் தெரிவாகியிருந்தனர்.
இன்று (2024.03.07) மிகவும் வி1றுவிறுப்பான நிலையில் இடம்பெற்ற 10 ஓவர்களைக் கொண்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிரயோக விஞ்ஞான பீட அணி ஐந்து விக்கட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்றிருந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய . தொழில்நுட்பவியல் பீட அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களை பெற்றது. இதன் அடிப்படையில் 70 மேலதிக ஓட்டங்களைப் பெற்று பிரயோக விஞ்ஞான பீட அணி 2023 கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்வி பிரிவின் பதில் பணிப்பாளர் பேராசிரியர் ஏ.எல். அப்துல் றவூப் அவர்களது தலைமையில் பிரயோக விஞ்ஞான பீட உடற்கல்வி போதனாசிரியர் ஐ.எம். கடாபி அவர்களது நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பதில் உபவேந்தரும் பொறியியல் பீட பீடாதியுமான பேராசிரியர் எம்.ஏ.எல். அப்துல் ஹலிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
போட்டியின் சிறந்த ஆட்ட நாயகனாகவும் சுற்றுப்போட்டியின் சிறந்த ஆட்ட நாயகனாகவும் பிரயோக விஞ்ஞான பீட அணியின் முன்னணி நாயகன் எஸ். ரொசாந் தெரிவு செய்யப்பட்டனர்.
நிகழ்வின்போது பீடாதிபதிகளான கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்களும் தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் அவர்களும் தென்கிழக்கு ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள் நிறைவேற்றுதர உத்தியோகத்தர்கள் உடற்கல்வி பிரிவின் உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK