அமெரிக்காவின் மீது அச்சத்தில் கோட்டாபய...?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மை பதவியில் இருந்து அகற்ற முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டம் பற்றிய நூல் ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

இந்த நூல் தென்னிலங்கை அரசியலில் பேசுபொருளாக உள்ளதுடன், சில உண்மைகள் நூலில் மறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கோட்டாபய பதவியில் இருந்து அகற்றும் சதித்திட்டத்தை அவரின் அருகில் இருந்த நெருங்கிய நண்பர்களே மேற்கொண்டதாக கடந்தகாலத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இவ் விடயம் குறித்து சிங்கள ஊடக ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க,

அமெரிக்கா மீதான அச்சத்தால் சில விடயங்களை கோட்டாபய, இந்த நூலில் மறைத்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது, கோட்டாபய ராஜபக்ஷவை அமெரிக்கா இயக்குவதாக அவர் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை

சவேந்திர சில்வா, கமால் குணரத்ன உட்பட அவரது நெருங்கிய நண்பர்கள் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றனர் என்பதையும் அவர் அறியாது நம்பிக்கையுடன் செயல்பட்டிருந்தார்.

இவர்கள் மீது கோட்டாபய இன்னமும் அச்சத்திலேயே உள்ளார். அவர் அமெரிக்கா மீதும் பயத்தில் இருக்கிறார். அதனால் புத்தகத்தில் பல உண்மைகளை குறிப்பிடவில்லை.” எனவும் உதயங் வீரதுங்க தெரிவித்துள்ளார்.



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK